ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள்…!!!

ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், வீடியோக்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகளை தெரிந்துக்கொள்வோம்.

hygn

இருந்த இடத்திலிருந்து இடையூறின்றி பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை, பொழுதுபோக்கு சாதனமாக எண்ணி விடாமல் பிடித்துக் கொண்டதுதான் நாம் செய்யும் முதல் தவறு என்கிறார்கள் விஞ்ஞானிகள் மணிக்கணக்கில் நாம் ஸ்மார்ட்போனில் விளையாடுவதால் ஏற்படும் உடல் – மன மாற்றங்களை அவர்கள் பெரிய பட்டியலாக அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

‘புளூவேல்’ விளையாட்டின் விபரீதம் புரியாமல் விளையாடி உயிரைவிட்ட சகோதர சகோதரிகளின் கதைகளை நாம் செய்தியாகப் படித்தோம். ஆனால் நாமும் ஸ்மார்ட்போன் அடிமையாக இருக்கிறோம் என்பதை நம்ப மறுக்கிறோம்.

போன்கள் குழந்தைகள் கைகளில் நீண்ட நேரம் இருப்பதால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது தெரியுமா…?

நமது மண்டை ஓடு, முழுமையாக வளர்ச்சி அடைய 13 வயதாகும். ஸ்மார்ட்போனில் இருந்து வரும் கதிர்வீச்சு எளிதாக மூளையைத் தாக்கக்கூடியது  தெரியுமா? அதுவும், முழுமையாக வளராத மண்டை ஓட்டைக் கடந்து குழந்தைகளின் மென்மையான மூளையை அதிகமாக பாதிக்கிறது செல்போன் கதிர்வீச்சு.

yujt

கதிர்வீச்சு அபாயத்தால் சிந்திக்கும் ஆற்றல் குறையும், ஹார்மோன்களும் சுரப்பும் தாறுமாறாக இடம்பெறுகிறது, அதிக கோபம் வருவதற்கு, பொறுமையிழந்து செயல்படுவதற்கும் இந்த ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களே காரணம்.

ஸ்மார்ட்போனில் பார்க்கும் விஷயங்களால் அறிவு வளர்வதைவிட, தீமைகளே அதிகமாக உள்ளன. குழந்தைகளின் புத்திசாலித்தனம் தூண்டப்படுவதைவிட அதிகமாக கோபமும், ஆத்திரமும்தான் தூண்டப்படுகிறது. இதனால் மனஅழுத்தமும் அதிகரிக்கிறது. கண்டிக்கும் பெற்றோர் மீதும் பாசம் குறைந்து, ஆத்திரம் வருகிறது.

‘ஸ்மார்ட்போன்கள். குழந்தைகளின் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. அடம்பிடிக்கும் தன்மையையும் அதிகரிக்கிறது. பெற்றோரை உதாசீனப்படுத்தும் குணத்தையும் தூண்டுகிறது.

ஓடி, ஆடி விளையாடும் விருப்பத்தை குறைக்கும் செல்போன்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியுடன், மனவளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான் போன்ற தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 80 முதல் 90 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் அடிமையாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.