ஷாம்பு,கண்டிஷனரை இப்படி பயன்படுத்துங்கள் – பின் தேடி வரும் நன்மைகள்..!

ஷாம்பு:

வறட்சி, எண்ணெய், நார்மல் போன்ற அனைத்து கூந்தல் வகையினரும், பி.ஹெச் (pH) 5.5 அளவு கொண்ட ஷாம்புவைப் பயன்படுத்துவது நல்லதாகும். ஷாம்பு பயன்படுத்துபவர்கள், அவசியம் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். ஷாம்புவை நீரில் கரைத்து அதன் பிறகு கூந்தலில் தடவ வேண்டும்.

கண்டிஷனர்:

கண்டிஷனரை தலையில் முடியின் வேர்ப்பகுதியில் பூசக் கூடாது. கூந்தலில் மட்டும்தான் பூச வேண்டும். கண்டிஷனர் பூசிய மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, நீரால் கூந்தலை அலச வேண்டும். ஏனெனில், கண்டிஷனர் கூந்தலை கோட் செய்ய இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகும்.
shampoo
சீரம்:

முடி உதிர்தல் பிரச்சனை, நுனி முடி பிளவுகள், அடங்காத முடி, சுருட்டை முடி, சிக்கு விழும் முடி போன்ற பிரச்சனை உள்ளோர் சீரம் பயன்படுத்தலாம். தலைக்குக் குளித்த பின், துவட்டும்போது பாதி ஈரமாக இருக்கும் பட்சத்தில் சீரத்தைத் தடவ வேண்டும். இது வெயில், மழை, தூசு, அழுக்கிலிருந்து கூந்தலைப் பாதுகாக்கும்.
conditionar
மெடிகேட்டட் சீரம்:

கலரிங் செய்த கூந்தல், ஸ்டரெயிட்னிங் செய்த கூந்தல் போன்றவற்றுக்குப் பிரத்யேக சீரம்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதே சரி.

மருத்துவரிடம் சென்று எந்த சீரம், ஷாம்பு, கண்டிஷனர் பொருந்தும் என ஒரு முறை ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.