வை.கஜேந்திரன் எழுதிய ‘மறுபிறப்பு’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா!

மன்னாரின் இளம் கவிஞரும் ஊடகவியலாளருமான வை.கஜேந்திரன் எழுதிய ‘மறுபிறப்பு’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா நேற்று  செவ்வாய்க்கிழமை(13) மாலை 2.30 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள குறித்த சிறுகதை நூல் வெளியீட்டு விழா வவுனியா தமிழ்ச்சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் வெளியீடு  செய்யப்பட்டுள்ளது.

குறித்த வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சாள்ஸ் நிர்மலநாதன்,கே.காதர் மஸ்தான்,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் உற்பட பலர் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.