வெள்ளையாக பிறந்த 2மாதக் குழந்தைக்கு நடந்தது என்ன?

மேற்குவங்க மாநிலத்தில் தந்தை ஒருவர் தனது குழந்தை வெள்ளையாக இருந்த காரணத்தினால் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sheikh Nazir- Saima Bibi தம்பதியினருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது.

தம்பதியினர் இருவரும் பார்ப்பதற்கு கருப்பாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு பிறந்த குழந்தை வெள்ளையாக இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த Nazir, தனது மனைவியிடம் உனக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கிறதா? என கேட்டு தொல்லை செய்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது, மேலும் குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தைக்கு அதிக சளி பிடித்துவிட்டதால் இறந்துவிட்டது என்று அருகில் வசிப்பர்களிடம் தெரிவித்து சடலத்தை புதைக்க முடிவு செய்துள்ளார்.

ஆனால், இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் பிரச்சனை அருகில் வசிப்பவர்களுக்கு தெரிந்த காரணத்தால், இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.