வெளியாக இருந்த ஜூலி படத்திற்கு தியட்டரே கிடைக்கவில்லையாம்!!!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானவர் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு பெற்றவர்.
இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் துன்பத்திற்கு ஆளானார். ஆனால் இவர் அதை சிறிதும் பொருள்படுத்தாமல் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் விமல் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் வேலைகள் முடிந்து, பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முயன்ற படக்குழுவிற்கு தியேட்டர் கிடைக்காததால் இந்த படத்தை இந்த மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் ஆரம்பத்திலோ வெளியிட முடிவு செய்துள்ளார்கள். சிறிய கதாபாத்திரத்தில் ஜூலி நடித்திருந்தாலும் இவருக்காகவே இந்த படத்தை சிலர் பார்ப்பார்கள் என்பது உண்மை தான்.