வெளிநாட்டு பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

கம்பஹா மெதகம பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண், பல தடவைகள் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் காரணம் எதுவும் தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.