வெளிச்சத்துக்கு வந்த பூனைக் கறி பிரியாணி!

சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடமாடிய பூனைகளின் கூட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது.

அதேசமயம் செங்குன்றம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் பூனைக்கறி பரிமாறப்படுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

இந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, ஹோட்டல்களுக்கு சாதாரண மனிதர்களை போல சாப்பிட பொலிசார் சாப்பிடச் சென்றுள்ளனர்.

அந்த தருணத்தில் பொலிசார் குழு பொறிவைத்து பூனைகளை பரிமாற்றம் செய்ய வந்த கும்பலை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு அவர்கள் சாக்குமூட்டைகளில் கட்டி வைத்திருந்த 12 பூனைகளை பறிமுதல் செய்தனர். அதில் 4 பூனைகள் இறந்த நிலையில் இருந்தன.

ஆட்டுக்கறி விலை கிலோ 600 ரூபாய்க்கு மேல் விற்பதால் கிலோ 100 ரூபாய்க்கு கிடைக்கும் பூனை கறியை வாங்குவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிய கடைகளை போல பெரிய ஹோட்டல்களிலும் இதுபோன்று பூனைக்கறி விற்பனை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.