வெற்றிப்பெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும்…!

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் எதிர்வரும் வாரம் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு  தகவல் தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கு இந்த முறை அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதால், உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டங்களை நடத்தும்போது இடவசதிகள் தொடர்பான பிரச்சினை ஏற்படும் என பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி அறிவித்துள்ளார்.

மேலும்,அத்தகைய உள்ளுராட்சி அதிகார சபைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ரோஹன ஹெட்டியாரச்சி வலியுறுத்தியுள்ளார்.