வீதியில் அரங்கேறிய அனுஷ்கா சர்மாவின் நடன வீடியோ!

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி தற்போது கேப் டவுனில் நடைபெற்று வருகின்றது.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் போட்டியை நேரில் சென்று கண்டு களித்துள்ளனர்.
இந்த நிலையில் அணித்தலைவர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, கேப் டவுனின் கடை வீதியில் உற்சாகத்துடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மிகுந்த சந்தோஷத்துடன் நண்பர் ஒருவருடன் அனுஷ்கா நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் இதே கேப் டவுன் வீதியில் விராட் கோலியும், ஷிகர் தவானும் நடனமாடிய வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.