வீட்டை தூய்மையாக்கும் அற்புத செடிகள்..!

காற்று மாசுபாடு காரணாமாக சுற்றுச் சூழல் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளியே மட்டுமல்ல வீட்டிலும் நம்மால் ஆரோக்கியமான காற்றை சுவாசிக்க முடியவில்லை.

சுத்தமான காற்றை பெற இயற்கை வரப்பிரசாதமாக அளித்துள்ள மரம், செடி, கொடிகளை வீட்டில் வளர்ப்பதனால் ஆரோக்கியமான காற்றை சுவாசிக்கலாம். அதற்கு வீட்டிற்குள் வளர்க்கக் கூடிய சில செடிகளை பற்றி பார்க்கலாம்.

வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்தும் தன்மை லில்லி பூவுக்கு உண்டு. எளிதாக வளரக்கூடிய இந்த செடி இலைகளும், வெண்மையான பூக்களும் வீட்டில் அமைதியை உண்டாக்கும்.

 

வீட்டின் கழிப்பறையில் அதிக உஷ்ணம் உணரப்பட்டால் அங்கு மருள் செடியை வளர்க்கலாம். இது வெளிச்சம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும்.

அதிகளவில் வீட்டில் வளர்க்கப்படும் செடி மணி பிளான்ட். இது வீட்டில் உள்ள மரசாமான்களில் படியும் வேதியல் பொருட்களை நீக்கி மாசடைந்த காற்றை தூய்மைப்படுத்துகிறது.

கற்றாழை சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை காண பெரிதும் உதவுகிறது. வீட்டில் கற்றாழை வளர்ப்பது காற்று தூய்மையாவதுடன், ஆன்மிக ரீதியிலும் வீட்டிற்குள் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்.

வெளிச்சம் குறைவாக இருக்கும் இடங்களில் மட்டுமே வளரக்கூடிய சீன செடியை கண்டுபிடித்து வளர்ப்பது சற்று கடினம். இது கழிப்பறைகளில் வைக்கக்கூடிய சிறந்த செடியாகும்.

.