வீட்டில் செல்வம் அதிகரிக்க செவ்வாய்கிழமைகளில் இந்த பொருட்களை அனுமனுக்கு படையுங்கள்!!!

அனுமனை மனதார நம்பிக்கையுடன் வணங்கினால், அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் காப்பார் என்று கூறுவார்கள்.அந்த வகையில் செவ்வாய் கிழமை அன்று ஒருசில பொருட்களை வைத்து படைத்தால், அவருடைய முழு ஆசிர்வாதத்தையும் பெறலாம் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது.

அனுமனுக்கு செவ்வாய் கிழமை அன்று படைக்க வேண்டிய பொருட்கள் என்ன?
செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்கி, அந்த துளசி இலைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு அதை வைத்து படைத்து வணங்கி, அந்த கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்து ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், வீட்டில் பணம் சேரும்.

அனுமனுக்கு ஆரஞ்சு நிற சிந்தூர் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங்களும் அகலும்.

மல்லிகை எண்ணெயை மனநிலையை மேம்படுத்த உதவுவது. இத்தகைய சிந்தூர் பொடியை மல்லிகை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அனுமனுக்கு திலகமிடுவது, மிகவும் நல்லது.

செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் ஆகியவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதத்தையும் பெறலாம்.