விலங்குகளின் அன்பு, கருணை மனிதர்களுக்கு பாடமாக !

மதுரையை அடுத்துள்ள கேசம்பட்டியில், ஒரு நாய், ஒரு ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேசம்பட்டி கிராமத்தில் தெய்வம் என்பவர் டீ கடை நடத்தி வருகின்றார். இவர் ஒரு ஆடு வளர்த்தார். அந்த ஆடு சில நாட்களுக்கு முன் ஒரு குறைமாத குட்டியை ஈன்றதும் இறந்துவிட்டது. குட்டிக்கு பால் டப்பா மூலம் பால் கொடுத்து காப்பாற்றி வந்தார்.
இந்நிலையில் அவரது டீ கடையில் ஒரு நாய் வளர்த்து வந்தார். அந்த நாய் சில தினங்களுக்கு முன் குட்டிகளை ஈன்று பால் கொடுத்து வந்தது.

நாளடைவில், அந்த நாய், தனியாக திரியும் அந்த ஆட்டுக்குட்டிக்கும் பால் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இதை பார்த்த அந்த ஊர் மக்கள் மெய்சிலிர்த்து போய் உள்ளனர்.மனிதர்கள் தங்களுக்கிடையே பல்வேறு பகைமையை வளர்த்து, வேறுபாடுகளை பார்த்து வரும் நிலையில், விலங்குகள் தங்களிடம் உள்ள அன்பு, கருணை மனிதர்களுக்கு பாடமாக உள்ளது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.