விண்வெளியில் பெட்மிட்டன் விளையாடி சாதனை படைத்த வீரர்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பெட்மிண்டன் விளையாடிய கானொளி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

இந்த பேட்மிண்டன் போட்டியில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கலந்து கொண்டனர்.

புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் நடப்பதே சிரமமாக இருக்கும் நிலையில் 4 வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடிய கானொளி அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

iss-crew-members-playing-badminton அத்துடன் பூமிக்கு வெளியே பேட்மிண்டன் விளையாடியது இதுவே முதல் முறையாகும்.

 

இது குறித்து பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் :- விண்வெளியில் விளையாடுவது செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொடி நாட்டுவதற்கு சமம் மேலும் இது

வீரர்களுக்கு மன அமைதியை கொடுப்பதோடு அவர்கள் இடையே நட்புறவை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளார்.