விஜய் பிறந்த நாளை அஜித் ரசிகர்கள் கொண்டாடுவார்களா?

தல அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் பல்கேரிய மற்றும் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் பொங்கல் திருவிழாவிற்கு பின்னர் மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் ஏற்கனவே 80% முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளிவந்தது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படம் வரும் ரம்ஜான் விடுமுறை தினத்தில் அதாவது ஜூன் 22 அல்லது 23-ம் திகதி வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜூன் 22 என்பது இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள். இந்த நாளில் அஜித் படம் வெளிவருவது என்பது இதுவரை நடந்திராத நிகழ்வு.

இந்த தகவல் உண்மையானால் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் அஜித் படம் வெளிவரும் கொண்டாட்டமும் ஒரே நாளில் நடைபெற வாய்ப்பு இருக்கின்றது.

இப்படி ஒரு விசேஷமான நாள் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.