விசேட சட்ட மூலத்தில் திருத்தங்கள் வேண்டாம் – ஒன்றிணைந்த எதிர்கட்சி

உள்ளுராட்சி மன்றங்களுக்கான விசேட சட்ட மூலத்தினை திருத்தங்களுக்கு உட்படுத்தாதிருக்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் மூவர் கையொப்பம்  இட்ட கடிதம் ஒன்றின் மூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

குறித்த கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.