வாட்ஸ் ஆப்பில் பணம் பரிமாற்றம் செய்வது எப்படி?

வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டில்  வீடியோ கோல் , வீடியோ ஸ்டேட்டஸ், லைவ் சொக்கேஷன் ஷேரிங் எனப் பல வசதிகள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

மேலும் சில நாட்களுக்கு முன் அனுப்பிய மெசேஜை திரும்பப்பெறும் வசதியையும் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.

எப்படி பணம் அனுப்ப முடியும்?
வாட்ஸ் ஆப்பில் புகைப்படம் , வீடியோ எப்படி அனுப்புவோமோ அதே இடத்தில் இந்த ஐகான் இருக்கும் . அதை கிளிக் செய்து பணம் அனுப்ப வேண்டும் . பணம் அனுப்ப கூடிய வரும், பணம் பெற கூடியவரும் அதற்கு என்று ஒரு கணக்கை (Account ) தொடங்க வேண்டும் .

இந்த அப்டேட் இப்போது வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷனில் வந்துவிட்டது. மேலும் தற்போது இதற்கான சோதனைகளை வெற்றிபெற்றுள்ளது.