வரவு செலவுத் திட்டம் – 2018! முழு விபரம் இதோ! ஒரே பார்வையில்!

பி.ப 05:46 நாளை (10) காலை 9.30 மணிக்கு, நாடாளுமன்ற சபை நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கும் என் சபாநாயகர் அறிவிப்பு

பி.ப 05:45 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வாசிப்பை அமைச்சர் மங்கள சமரவீர முடித்துக்கொண்டார்.

பி.ப 05:44 குறுந்தகவல் மூலம் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு வரி அறவிடப்படும்.

பி.ப 05:42 உள்நாட்டு அல்லாத வெளிநாட்டு மதுபானங்களுக்கு வரி

பி.ப 05:40 வங்கிப் பரிமாற்றல்களுக்காக 1000 ரூபாய்க்கு 20 சதம் வரி அறவிடப்படும்

பி.ப 05:38 2018 ஆம் ஆண்டுக்குள் 1.9 டிரில்லியன் ரூபாய் கடன் செலுத்தப்பட வேண்டும்.

பி.ப 05:33 காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கு 1.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பி.ப 05:30 தம்புளை மற்றும் கொழும்புடன் இணைக்கப்பட்ட நவீன​ பொருளதார மையமொன்று, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும்

பி.ப 05:29 வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணத்தில் சிறிய வட்டியினாலான கடன் வசதிகள் வழங்குவதற்கு, 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பி.ப 05:28 ஓய்வுக்குப் பின்னர், எதிர்காலத்துக்கான விவசாய காப்பீடு.

பி.ப 05:27 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 50,000 ​செங்கல் வீடுகள் நிர்மாணிக்கப்படும். வடக்கு கிழக்கு வீடமைப்புக்கு 3 பில்லியனும் பெருந்தோட்டத்துக்கு 2 பில்லியனும் ஒதுக்கீடு

பி.ப 05:22 கலைஞர்களுக்கான மருத்துவ காப்பீடு.

பி.ப 05:21 தொல்பொருள் தளங்களின் புனரமைப்புக்கு,250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பி.ப 05:19 இரத்தினபுரி, வெலிமடை நீதிமன்ற வளாகங்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை.

பி.ப 05:19 பௌத்த வாசிகசாலையொன்றை அமைப்பதற்கு, 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பி.ப 05:13 நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, நவீன பதிவு செய்யக்கூடிய வகையிலான இயந்திரங்களுடன் கூடிய வசதிகளுக்கு 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பி.ப 05:11 ஐ.நா. அமைதிப்படையில் பங்கேற்கும் இராணுவத்துக்கு பயிற்சியளிப்பதற்கு 750 மில். ஒதுக்கீடு

பி.ப 05:10 பொலிஸ் மற்றும் குற்றப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு 500 மில்லியனுக்கு அதிகமான நிதியொதுக்கீடு

பி.ப 05:08 வன விலங்குகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.

பி.ப 05:07 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20,000 வீடுகளைக் கொண்ட தொகுதி, 2020இல் நிர்மாணிக்கப்படும்.

பி.ப 05:06 பாடசாலை மாணவர்களுக்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார காப்புறுதித்திட்டம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும்

பி.ப 05:05 லயன் திட்டங்களை ஒழித்து 25,000 வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பி.ப 05:04 வடக்கில் இடம்பெயர்தோருக்காக ஆரம்பிக்கபட்டுள்ள வீடமைப்புத்திட்டத்துக்கு 3000 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப 05:03 மதுபானத்தின் மீது, தேசத்தை கட்டியெழுப்பும் வரி 2018 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அறவிடப்படும்

பி.ப 05:02 எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் ​நோய் அறிகுறிகளை ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிப்பதற்கு, 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பி.ப 05:01 குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஒரு சதவீத சீனியின் அளவுக்கு 50 சதம் வரி. இன்று இரவிலிருந்து அமுலில்.

பி.ப 04:58 சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பி.ப 04:57 விளையாட்டு காலணிகளில் இறக்குமதி வரி நீக்கப்படும்.

பி.ப 04:56 மஹாபொல புலமைப்பரிசிலுக்கு, வருடாந்தம் ஒதுக்கப்பட்ட 300,000 ரூபாய் 500,000 ரூபாயாக அதிகரிக்கப்படுவதோடு, 3,000 கூடுதல் மாணவர்கள் புலமைப்பரில்களைப் பெற்றுக்கொள்வர்

பி.ப 04:55 கிராமிய மட்டத்தில் 100 விளையாட்டு மைதானங்களை அபிவித்தி செய்ய 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பி.ப 04:53 சுதேச மருத்துவத்துக்கான ஒரு பட்டப்படிப்பு நிறுவனம் அமைக்கப்படும்.

பி.ப 04:52 வயம்ப, சப்ரகமுவ மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியை அபிவிருத்தி செய்வதற்க, 1.25 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பி.ப 04:51 ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை அதிகரிக்க ரூ 750 மில்லியன் ஒதுக்கீடு.

பி.ப 04:51 மரபியல், ரோபோட்டிக்ஸ் மற்றும் நனோ தொழில்நுட்பங்கள், பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்படும்.

பி.ப 04:50 யாழ். வளாகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்துக்கு, புதிய நூலகம்

பி.ப 04:49 விலைமதிப்பற்ற கற்களை வெட்டுதல், மெருகேற்றி ஏற்றுமதி செய்வதற்கு இலங்கைக்கு கொண்டுவரப்படும் போது, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி விதிக்கப்பட மாட்டாது.

பி.ப 04:46 தேசிய கல்வி நிறுவனங்கள் மறுசீரமைப்பு.

பி.ப 04:43 ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்தின் உதவியுடன், புதிய ஐந்து தொழிற்பயிற்சி நிலையங்கள் நிர்மாணிக்கப்படும்.

பி.ப 04:43 கழிவு முகாமைத்துவத்தை நிர்வகிக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைக்கப்படும்.

பி.ப 04:41 முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வி முதலீடுகள்.

பி.ப 04:38 பிட்டிபனையில், உயர் தொழில்நுட்ப பூங்கா.

பி.ப 04:36 முச்சக்கரவண்டி அதிகாரசபை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அது போக்குவரத்து அமைச்சின் கீழ்​ கொண்டுவரப்படும்.

பி.ப 04:35 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வைத்திருப்போரிடமிருந்து, அனைத்து விமானநிலைங்கள் மற்றும் துறைமுகங்களில், அறவிடப்படும் வரியை மீள்பெறும் திட்டம் 2018 மே மாதம் 1ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும்.

பி.ப 04:33 ஐந்து வருடங்களுக்கு குறைந்த வாகனங்களுக்கு புதிய காபன் வரி

பி.ப 04:32 வாகன நெரிசலற்ற வீதிகளில் ஓடும் இலத்திரனியல் வாகனங்களுக்கு வரிக் குறைப்பு.

பி.ப 04:31 மதுர ஓயா மற்றும் கல் ஓயா ஆகிய பூங்காக்களை உயர் ரக சவாரி இடங்களாக மாற்றுவதற்கு 75 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

 

பி.ப 04:29 கோட்டை, நானு-ஓயா மற்றும் எல்ல ஆகிய புகையிரத நிலையங்கள், தொல்பொருள் இடங்களாக பிரகடனம்.

பி.ப 04:28 சுற்றுலாத் துறைக்கு தேவையான சில குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மீது சுமத்தப்படும் கட்டணத் தீர்வுகள் அகற்றப்படும்

பி.ப 04:27 அனைத்து சுற்றுலாத்துறை சேவை வழங்குநர்களையும் இலங்கை சுற்றுலாத்துறை சபையின் கீழ் பதிவு செய்யுமாறு வலியுறுத்தல்

பி.ப 04:26 2025ஆம் ஆண்டளவில், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி 3 மடங்களால் அதிகரிக்கும்.

பி.ப 04:26 சிலாபம், மிரிஸ்ஸ, காரைநகர், பூரனாவெல்ல மீன்பிடித்துறைமுகங்களை புனரமைப்பதற்கு 1750 மில்லியன் ஒதுக்கீடு.

பி.ப 04:25 அன்னாசி, வாழைப்பழ உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு, விசேட ஆராய்ச்சி நிலையம்.

பி.ப 04:23 மர ஆராய்ச்சி நிலையமொன்றை அமைக்க 25 மில்லியன் ஒதுக்கீடு.

பி.ப 04:22 மாணிக்கக்கல் தொழிற்துறை – வெட்டி பளபளப்பாக்கப்பட்ட மாணிக்க கற்கள் மீதான தேசத்தை கட்டியெழுப்பும் வரி நீக்கம்

பி.ப 04:21 வயம்ப பல்கலைக்கழகத்தில் கோழி ஆராய்ச்சிக்காக நிலையம் ஒன்றை அமைக்க 125 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப 04:20 பயன்படுத்தப்படாத அரசாங்க காணிகள் உள்நாட்டு கோழி பண்ணையாளர்களுக்கு வழங்கப்படும்

பி.ப 04:19 தேங்காய் மற்றும் தென்னை தொழிற்துறையில் புதிய ஒழுங்குவிதிகள். தென்னை ஆராய்ச்சிக்கு 25 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப 04:18 தேயிலை தொழிற்துறை அபிவிருத்திக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப 04:17 கருவாப்பட்டை மற்றும் மிளகு தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்ய 50 மில்லியன் ஒதுக்கீடு.

பி.ப 04:13 தரநிர்ணய நிறுவனங்களை சர்வதேச தரத்துக்கு அபிவிருத்தி செய்ய 250 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப 04.12 ஏற்றுமதி சந்தை ஆதரவு திட்டத்திற்கு 800 மில்லியன் ஒதுக்கீடு.

பி.ப 04:11 காலநிலை அவதான நிலையத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

பி.ப 04:11 தகவல் தொழில்நுட்பத்துறை அபிவிருத்திக்கு 3000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பி.ப 04:09 விசேட தேவையுடைய நபர்களால் முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வரி நிவாரணம்.

பி.ப 04:08 ஐந்து வருடங்களில், இலங்கையில் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிப்பதற்கு 3 பில்லியன் ஒதுக்கீடு.

பி.ப 04:07 சுயதொழில் புரிவோருக்கான கடன் திட்டத்துக்கு, 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பி.ப 04:06 சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு 10 சதவீத நிவாரணம்

பி.ப 04:04 மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்மாதிரியான, நீர்வாழ் உயிரியல் பூங்காவுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

பி.ப 04:02 கிராம சக்தி வேலைத்திட்டத்திற்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

பி.ப 04:02 வட்டி கொடுப்பனவுகளுக்கு நிவாரணம் வழங்க 750 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப 04:01 சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவதற்காக சிறப்பு வங்கி ஒன்றை அமைக்க 10,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பி.ப 04:00 பயிர் காப்பீட்டுத்திட்டத்துக்கு, 3 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பி.ப 03:59 ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக, 55 அடி நீளமான இழுவைப்படகுகளின் செலவு வீதத்தில், 50 சதவீதமானததை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.

பி.ப 03:57 கடலட்டை வளர்ப்புக்காக, கிளிநொச்சி பூநகரியில் விசேட திட்டம்.

பி.ப 03:56 கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில், விவசாயத்தை மேம்படுத்துவதற்காக களஞ்சியசாலைகள்.

பி.ப 03:56 மீன் குளிரூட்டிக்காக 50 வீதம் அரசின் பங்களிப்பு

பி.ப 03:55 கையடக்கத் தொலைபேசி கோபுரங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படும்

பி.ப 03:55 வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், மழை நீர் சேமிப்புக்காக, மத்திய மற்றும் நடுத்தர குளங்களைப் புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு

பி.ப 03:54 பச்சை வீட்டு திட்டடங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கான வரி நீக்கம்

பி.ப 03:54 சிறிய மற்றும் நடுத்தர குளங்களை புனரமைப்பதற்கு 1000 மில்லியன் ரூபாய்.

பி.ப 03:50 கல்கிசையிலிருந்து இரத்மலானை வரையிலான கரையோர பாதுகாப்புத் திட்டத்துக்கு, 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பி.ப 03:50 10 களப்புகளை புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு

பி.ப 03:47 பின்னவளை மிருகக் காட்சிசாலை புனரமைக்கப்படும்.

பி.ப 03:46 தெஹிவளை மிருகக் காட்சி சாலை மற்றும் ஏனைய மிருகக் காட்சிசாலை அனைத்தும், திறந்தவௌியாக மாற்றப்படும்.

பி.ப 03:46 இலங்கையின் ஒவ்வொரு நிர்வாகப் பகுதிகளிலும், பசுமை இலங்கை திட்டத்துக்குக் கீழ், ஓடு பாதைகள், நூலகம், தியான மையங்கள் போன்றவை அமைக்கப்படும்.

பி.ப 03:43 வெள்ளத்தை கட்டுப்படுத்த தற்காலிக தீர்வாக பாதுகாப்பு கட்டடங்கள் நிர்மாணிக்கப்படும்

பி.ப 03:41 தற்போது பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டிகளை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்

பி.ப 03:41 நாடளாவிய ரீதியில், மின்சார சார்ஜ்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.

பி.ப 03:40 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான வரி விதிக்கப்படும்

பி.ப 03:40 காற்றுப்பைகள் (Air Bag) இல்லாத வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படும்.

பி.ப 03:38 2,500 சிசி திறனுக்கும் அதிகமான சொகுசு வாகனங்களுக்கு சொகுசு வரிகள் அறவிடப்படும்.

பி.ப 03:38 இலங்கை போக்குவரத்து சபைக்கு, 50 மின்சார பஸ்களை கொள்வனவு செய்ய 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பி.ப 03:34 இலத்திரனியல் கார்களுக்கான 1 மில்லியன் இறக்குமதி வரி குறைப்பு

பி.ப 03:30 2025 க்குள் அனைத்து அரசு வாகனங்களும் இலத்திரனியல் அல்லது ஹைபிரிட் ஆக இருக்கும்.

பி.ப 03:30 நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் 2040 ஆம் ஆண்டளவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு இருப்பதை உறுதி செய்வோம்.

பி.ப 03:24 பண வீக்கத்தை 6% ஆக பேணுவதற்கு இந்த வரவு செலவுத்திட்டம் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

பி.ப 03:24 10,000 தொழில்வாய்ப்புகள்

பி.ப 03:22 நிலைபேறான அபிவிருத்தியை இலக்குகளை அடைவது தொடர்பில் எனது வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பி.ப 03:20 தொழிலாளர் சந்தை மற்றும் சட்டதிட்டங்கள் தொடர்பில் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்

பி.ப 03:19 காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்

பி.ப 03:18 எதிர்காலத்தில் வாழ்க்கைச் செலவு குறைந்து வருவதை நாம் காண்கிறோம்.

பி.ப 03:18மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.5 இலிருந்து 14.2 ஆக அதிகரித்துள்ளது.

பி.ப 03:16 சர்வதேச நிறுவங்களுடன் இணைந்து பணியாற்றுவதால் மூலம் இலங்கை இழந்த நம்பிக்கையினை மீண்டும் கொண்டுவர எம்மால் முடிந்தது.

பி.ப 03:16 எமக்கு இயற்கை அனர்தங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

பி.ப 03:16 நாம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை அதிகரித்துவரும் அரச கடன் மற்றும் குறைந்து வரும் வருமணமுமாகும்.

பி.ப 03.10 நிதி அமைச்சராக நான் சமர்ப்பிக்கும் முதலாவது வரவுசெலவுத்திட்டம் இதுவாகும்

பி.ப 03:07 நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு வருகை

பி.ப 03:06 சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு வருகை