வன்முறைகளற்ற தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன!!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் நிறைவேற்றுச் சபை நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி, தேச விடுதலை மக்கள் கட்சி, தேசிய காங்கிரஸ், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இதன்போது கலந்துக்கொண்டனர்

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி வன்முறைகளற்ற சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தேர்தல் வெற்றியானது தேர்தல் வேட்பாளர்களின் மீதே தங்கியுள்ளது என்பதனால் கூட்டணியின் சகல கட்சிகளும் நேர்மையான அரசியல் கொள்கைகளை உடைய அபேட்சகர்களை தமது கட்சி சார்பாக தேர்தலில் முன்னிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.