வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேனு! மஹிந்த???

நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னணி அமோக வெற்றி வெற்றி பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வட்டார ரீதியாக வெளியாகியுள்ள அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி பொதுஜன பெரமுன முன்னணி 15 மாவட்டங்களில் வெற்றியைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழு கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் ஐ.தே.க வெற்றி பெறும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், உத்தியோகபூர்வமான முடிவுகள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில்  பின்தங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் வெற்றிகளை  பெற்றுள்ளமை ஏனைய கட்சிகள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்நிலையில் கபாலி ரஜனியை போல எப்படி போனேனோ அப்படியே மஹிந்த வந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகழ ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.