லிந்துலை மெராயா பகுதியில் தீ விபத்து!

இன்று (18) அதிகாலை 3.15 மணியளவில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்ற போதிலும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
பிரதேச பொது மக்கள், பொலிஸார், நுவரெலியா மாநகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.