ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி பரிகாரங்கள்!

http://onlinerx365.com/propecia_generic.html|purchase Propecia online August 10, 2016 குருபெயர்ச்சி பலன்கள் Leave a comment 485 Views

வேத ஜோதிடத்தில் சாதகமற்ற பலன்களை குருபகவான் தரும் இடங்களாக சொல்லப்பட்ட மூன்று, நான்காமிடங்களில் இதுவரை குருபகவான் அமர்ந்து உங்கள் ராசியை கண்டும், காணாமலும் இருந்தார்.

அந்த நிலைமை இந்த குருப்பெயர்ச்சியுடன் நீங்கி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி தற்போது உங்கள் ராசியைப் பார்க்கிறார்.

இந்த நிலைமை ஒரு அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே அனைத்து நன்மைகளும் கைக்கூடும் காலம் ஆரம்பமாகி இருக்கிறது.

பிறந்த ஜாதக அமைப்பில் யோக தசாபுக்திகள் நடக்கும் ரிஷபராசிக் காரர்களுக்கு பருத்தி புடவையாய் காய்த்தது போன்ற நல்ல விஷேசமான நற்பலன்கள் இருக்கும்.

எனவே குருபகவான் தர இருக்கும் நன்மைகளை கூட்டிக்கொள்ளும் விதத்தில் குருவின் நிறம், சுவை, தான்யம், வாகனம், போன்றவைகள் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ள வேண்டும்.

குருவிற்கான பரிகாரமாக உங்களின் ஜென்ம நட்சத்திரமன்று அன்றைய தினத்திற்கான குருஹோரை எதுவென்று தெரிந்துகொண்டு அந்த குருஹோரை நேரத்தில் அல்லது ஏதேனும் ஒரு வியாழக்கிழமை குரு ஹோரை எனப்படும் காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1 மணி முதல் 2 மணி வரை.

இரவு 8 மணி முதல் 9 மணி வரை குருவின் வாகனமான ஒரு யானைக்கு அந்த பெருஞ்ஜீவனுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதை பாகனிடம் முன்னரே கேட்டுத் தெரிந்துகொண்டு அதை உங்கள் கையால் கொடுத்து அதனிடம் ஆசிகளைப் பெறுவது குருவின் நன்மைகளை அதிகப்படுத்தும்.