ராவத்தையில் பெண்ணொருவருக்கு நடந்த கொடூரம்!

காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மொரட்டுவை காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. மொரட்டுவை  ராவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டுள்ளவர் ராவத்தை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான பெண்ணொருவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.