ராஜகிரிய விபத்தில் ஓர் உயிரைப்பறித்த மாணவர்களின் மீது வழக்கு!!!!

ராஜகிரிய  சில்வா ஒழுங்கை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் பலியாவதற்கு காரணமாக அமைந்த கெப் ரக வாகனத்தை செலுத்திய மாணவன் மற்றும் அதற்கு பின்னால் வந்த சிற்றூர்ந்தை செலுத்திய மாணவன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சாரதி அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்படவுள்ளதாக வெலிக்கடை காவல்நிலைய உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இருவரும் போட்டி மனப்பான்மையுடன் வாகனத்தை செலுத்திச் சென்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் அதனை உறுதிப்படுத்திக் கொள்ள அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.