ரசிகர்கள் கூட்டத்தை இழந்த மலேசியா நட்சத்திர கலைவிழா!

மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவிற்கு 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 5 ஆயிரம் பேர் தான் கலந்துகொண்டுள்ளனர். அதிலும் ஆயிரம் பேர் இலவச டிக்கெட்டில் வந்திருந்தார்கள்.actors

இதனால் மலேசியா செபராங் பெராய் நகர மாமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி இந்த நிகழ்ச்சி பற்றி பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். மலேசியா சினிமா நடிகர்களின் இந்த முயற்சி தங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது என மக்கள் உணர்ந்து விட்டனர். மேலும் மலேசியாவில் 100 க்கும் அதிகமான பள்ளிக்கூடங்கள் மோசமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் நட்சத்திர கலை விழாவை மக்கள் புறக்கணிக்குமாறு சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. நடிகர்களை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக அரசியல் பிரமுகர் ஒருவர் நடந்து கொண்ட விதம் மக்களிடம் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் அவர்களால் சங்கத்துக்கு பணம் கொடுக்க முடியாதா என மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

நிதி திரட்டுவதற்காக அல்லாமல் பொழுதுபோக்கு அம்சமாக விழாவை நடத்தியிருந்தால் கூட்டத்தை ஈர்த்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.