ரசகுல்லா பண்டத்தின் வரலாறு!

ரசகுல்லா பண்டம் ஒடிசாவும் மேற்குவங்கமும் போட்டி போட்டுக்கொண்டநிலையில் இப்போது அதற்கான புவிசார் குறியீடு மேற்குவங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலாடைக்கட்டியால் ஆன பஞ்சு போன்ற உருண்டைகளை பாகில் ஊறவைத்து தயாரிப்பதே ரசகுல்லா.

ரசகுல்லாவை 1868-ல் நபின் சந்திர தாஸ் முதலில் தயாரித்து அறிமுகம் செய்ததாக மேற்கு வங்கம் உரிமை கோரியது. தங்களது ரசகுல்லா 150 வருட பழைமை வாய்ந்தது என்றது மேற்கு வங்கம். ஒடிசாவோ, தங்களது ரசகுல்லா குறைந்தது 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், ஜகன்நாத கடவுள் லட்சுமி தாயாருக்கு இதனை வழங்கிய ஐதீகம் இருப்பதாகவும், இதற்கு மேற்குவங்கம் உரிமை கோர கூட வாய்ப்பு இல்லை என்று கூறியது. 

இந்நிலையில், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இனிப்புப் பண்டமான ரசகுல்லாவுக்கு புவீசார் குறியீடு அளிக்க மேற்கு வங்கம் விண்ணப்பித்தது. மேற்குவங்கத்தின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.