யூதர்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது – ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் 2017 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு யூதர்களுக்கெதிரான நான்கு குற்றங்கள் நடந்துள்ளதாக பொலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

கடந்த ஆண்டு யூதர்களுக்கெதிரான 1400 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை வலது சாரி தீவிரவாதம் மற்றும் நாசிசக் கொள்கைகளைப் பின்பற்றுவோரால் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட குற்றங்களில் 32 வன்முறைக் குற்றங்களும், 160 சொத்துகள் சேதப்படுத்துதலும், 898 இன் வெறுப்புத் தூண்டுதல் குற்றங்களும் அடங்கும்.

இந்தப் புள்ளிவிவரம் இன்னும் முழுமை பெறாததால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று ஜேர்மன் அரசு எதிர்பார்க்கிறது.

1377 குற்றங்கள், அதாவது 95 சதவிகித குற்றங்கள் வலது சாரி தீவிரவாத இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்டவை.

33 குற்றங்கள் வெளிநாடுகளில் பிறந்த இஸ்லாமியரல்லாத யூதர்களுக்கெதிரானவர்களால் நிகழ்த்தப்பட்டவை.

25 குற்றங்கள் வெளி நாடுகளில் பிறந்த அல்லது ஜேர்மானிய இஸ்லாமியர்களால் நிகழ்த்தப்பட்ட, மதப்பின்னணி கொண்டவை.

17 குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதன் நோக்கம் சரிவரத் தெரியவில்லை.

கடந்த ஆண்டு ஜேர்மன் நாடாளுமன்றத்தில் யூதர்களுக்கெதிரான குற்றங்களைக் கையாள்வதற்காக கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவதற்கான மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

யூதர்களுக்கெதிரான எண்ணங்களையும் குற்றங்களையும் வேரறுக்கும் திட்டங்களை வகுப்பதற்காகவும் செயல்படுத்துவதற்காகவும் ஒரு கமிஷனர் பதவியும் ஏற்படுத்தப்படவுள்ளது.