யுத்தத்திற்கு காரணம் மொழிப் பிரச்சினை : விஜித ஹேரத்..!!!

இலங்கையில் இரு மொழிக் கொள்கை இருந்தும் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இதையொரு தேசியப் பிரச்சினையாக கருதி இதற்கு உடனடியாக அதற்கான தீர்வைக் காண வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற 2018ஆம்  ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

30 வருடங்களாக இந்த நாட்டில்  இடம்பெற்ற யுத்தத்திற்கு பிரதான காரணமாக மொழி பிரச்சினையே காணப்பட்டது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 70 ஆண்டு ஆட்சிகளில் இரு தரப்பும் இந்த பிரச்சினை குறித்து தீர்வான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  இரு மொழிக் கொள்கை என்பதே தேசிய சமாதானத்திற்கும், அடிப்படையாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.