யாழ். பல்கலைக்கழத்தில் கலைப்பீட மாணவர்களிடையே மீண்டும் மோதல்…!!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தின் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர் குழுக்கள் இடையில் மீண்டும் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் தலையிட்டு இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கலைப்பீடத்தின் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டும், நேற்று கல்வி நடவடிக்கைளுக்காக மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் இடம்பெற்றிருந்த மோதல் காரணமாகவே இவ்வாறு பல்கலைக்கழகம்மூடப்பட்டிருந்த றிலையில் மீண்டும் மோதல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மோதல் சம்பவத்தில்  மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.