யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் இன்று…!!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் இன்று முதல் வழமைபோல் இடம்பெறும் என பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன்  அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலை பீடத்தின் 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கிடையே கடந்த 11 -ம் திகதி ஏற்பட்ட மோதல் காரணமாக கலை பீடத்தின் 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுக்கான தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று முன்தினம் நீக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.