யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான விரிவுரைகள் நாளை மீள ஆரம்பம்…!!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் நாளை முதல் மீண்டும் இடம்பெறும் என பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலை பீடத்தின் 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கிடையே கடந்த 11-ம் திகதி  ஏற்பட்ட மோதல்  காரணமாக கலை பீடத்தின் 3-ம் மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுக்கான தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர், மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நீக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நாளை முதல் அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.