மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் பணி நாளை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மொறகஹகந்த பல்நோக்கு திட்டத்தின் கீழ் நீர்த்தேக்கத்தில் சம்பிர்தாயபூர்வமாக நீர் நிரப்பும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த திட்டத்திற்காக 1150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் 94000 ஹெக்டயர் நிலப்பரப்பில் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அனுராத ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

மொறகஹகந்தையில் இருந்து நிர்மாணிக்கப்பட்டுவரும் இஹல எலஹெர வாய்க்கால் திட்டத்தையும் நாளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். 103கிலோ மீற்றர் நீளமான வாய்க்கால் கட்டம் கட்டமாக நிர்மாணிக்கப்படும். இதற்காக காணிகளை இழந்த குடும்பங்களுக்க காணியும்இ நஷ்டஈடும் வழங்கப்படுகிறது.

ஜனாதிபதியின் முயற்சியால் 12 இலட்ச ரூபா வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. இதுவரை 3700 குடும்பங்களுக்கு மீளகுடியேற்ற காணிகளும்இ நஷ்டஈடும் வழங்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவிக்கையில் விதிமுறைகளைத் தாண்டிச் சென்று இழப்பீடு வழங்கியதாக கூறினார்.

ஜனாதிபதியின் தலையீட்டால் பௌத்த வணக்கத் தலங்களுக்கு சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டளவில் மொறகஹ-கந்த,களுகங்கை பல்நோக்கு திட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இழப்பீடு வழங்குவதில் எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை என்றும் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.