மொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தை சாய் ரமணி என்பவர் இயக்கியிருக்கிறார்.

லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் லாரன்ஸ் போலீஸ் கெட்டப்பில் நடித்து அசத்தியிருக்கிறார்.

அந்த டிரைலரில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் எல்லாம் கண்டிப்பாக படத்திற்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது வருகிற பிப்ரவரி 17-ந் தேதி இப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதற்கு முன்னதாக பிப்ரவரி 5-ந் தேதி இப்படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.