மைத்திரியின் நிலைப்பாடு என்ன? அடுத்து பிரதமராகப் போவது யார்…?

இலங்கை அரசியலில் நெருக்கடி நிலைகள் ஏற்பட்டுள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியில் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி அந்த கட்சிக்கு அறிவித்துள்ளதாக குறித்த அமைச்சர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை இணைத்து தனி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதாக ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த யோசனைக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு தான் அமைச்சு பதவி வழங்க முடியாதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

புதிய அரசியமைப்பை பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் நிலைப்பாட்டை நீக்கிக் கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தில் இருந்து விலகி சஜித் பிரேமதாஸவுக்கு அல்லது கரு ஜயசூரியவுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியினுள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்றதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.