முஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் – செய்யக் கூடாதவையும்!

Buy Wellbutrin Sr France October 11, 2016 இஸ்லாம், கலாச்சாரம் Leave a comment 308 Views

 சில பகுதிகளில் முஹர்ரம் 10 அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திஹா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத் குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.
வேறு சில பகுதிகளில் ஹூஸைன் (ரழி) அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்தச் சொற்களைப் பயன் படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (புஹாரி 1294)

முஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்ய வேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்த போது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவ்னையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள். மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

ஆஷூரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே என நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

Buy Cialis Soft cheap ஆஷூரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர் 

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்.

‘ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமழான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. (புஹாரி எண் 2006)

ஸலமா இப்னு அக்வஃ (ரழி) அறிவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ‘இன்று ஆஷூரா நாளாகும் எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும். யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும். என்று அறிவிக்கச் செய்தார்கள்.  (புஹாரி எண் 2007)

cheap Cialis Soft USA ஆஷூரா நோன்பு ரமழானுக்கு முன்னும் பின்னும்

ஆயிஷா (ரழி) அறிவத்தார்கள்.

அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர் நபி (ஸல்) அவர்களும் நோற்றனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கபட்டதும் ஆஷூரா நோன்பை விட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர் விட்டு விட்டனர். (புஹாரி : எண் 2002)

எனவே, சகோதர, சகோதரிகளே! இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிர்அவ்ன் இடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா (அலை) அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அது போல ஃபிர்அவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாட்டாரிடமிருந்தும் சக முஸ்லிம்களின் உயிர் உடமை மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும் உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.