முன்னாள் உபவேந்தர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்த நிலையில் கிழக்கு பல்கலையின் விவசாயப் பீடத்தினால் நினைவு அஞ்சலி நிகழ்வொன்று வியாழக்கிழமை கிழக்கு பல்கலை கழக விவசாயப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பி.சிவராசா ஏற்பாட்டில் நடைபெற்றது.

Displaying DSC00040.JPG

இவ் நினைவஞ்சலி நிகழ்வில் உபவேந்தரின் உருவப் படத்திற்கு பிரதி உபவேந்தர் கலாநிதி ஏ.கருணாகரனினால் மலர் மாலை அணிவித்து இரண்டு நிமிட அகவணக்கம் இடம்பெற்றது.

அந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகள் கடந்தும் நீதியான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் இச்சந்தப்பத்தின் சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை என விவசாயப் பீடாதிபதி கலாநிதி பி.சிவராசா தனது உரையில் தெரிவித்தனர்.

Displaying DSC00053.JPG

குறித்த நினைவஞ்சலி நிகழ்வுக்கு கிழக்கு பல்கலையின் பிரதி உபவேந்தர் கலாநிதி ஏ.கருணாகரன் ஓய்வு பெற்ற பேராசிரியர் வி.அருள்நந்தி விவசாய பீடாதிபதி கலாநிதி பி.சிவராசா மற்றும் பீடத் தலைவர்கள் விரிவுரையாளர்கள் அத்துடன் கல்விசார் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் உபவேந்தர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாதின் நினைவு நூல் கிழக்கு பல்கலையின் பிரதி உபவேந்தர் கலாநிதி ஏ.கருணாகரனினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

Displaying DSC00058.JPG

கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து கடந்த 2006.12.15ம் திகதி முன்னாள் உபவேந்தர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Displaying DSC00004.JPG