முதன்முறையாக சவுதியில் கால்பந்து போட்டியினை பார்வையிட பெண்களுக்கு அனுமதி…!!!

சவூதியில் முதன்முறையாக கால்பந்து போட்டியினை பார்வையிட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விளையாட்டு மைதானங்களில் நுழைவதற்கு, பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டு பெண்கள் கால்பந்து போட்டியை காண அனுமதி அளித்தது. சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்று ஜெட்டாவில் நடந்த உள்ளூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை காண பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். எனினும் குடும்பத்தினருடன் சேர்ந்து அமரும் பிரிவில் தான் அவர்கள் அமர வேண்டும் எனவும், உத்தரவிடப்பட்டது.