முகபொழிவிற்கு நீராவி பிடியுங்கள்….

முகச் சுருக்கம் இல்லாமல், அழுக்கு இல்லாமல், கரும்புள்ளிகள் இல்லாமல் எப்படி முகத்தை பேணிக் காப்பது என்று தெரிந்துக்கொள்வோம்.

* முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க நீராவி பிடிக்கலாம். நீராவிபிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதாக வந்துவிடும்.

* கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகளும் நீங்கிவிடும். இதற்கு 5 முதல் 10 நிமிடம் வரை நீராவி பிடிக்க வேண்டும்.

* நீராவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். நீராவி பிடிக்கும் போது சருமத்தின் எண்ணெய் சுரப்பிகளில் இருந்து எண்ணெய் பசை வெளியேறும். துணியால் துடைக்கும் போது அவை நீங்கிவிடும். முகப்பருவும் குறையும்.

* அடிக்கடி நீராவி பிடித்து வந்தால் , முதுமை தோற்றதை தடுக்கலாம். சருமத்தில் அழுக்குகள் தங்கிவிடுவதால் முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்துடன் காணப்படுகிறது. அப்போது நீராவி பிடித்தால், அழுக்குகள் நீக்கப்பட்டு பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* முகப்பரு இருந்தால் 4-5 நிமிடம் நீராவி பிடிக்க வேண்டும். 30 நிமிடம் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்கும்போது, பிம்பிள் உடைந்துவிடும். இதன் மூலம் ஒரே நாளில் முகப்பருவை குறைத்து விடலாம்.

* நீராவி பிடிக்கும் போது முகத்திற்கு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். இதன் மூலம் முகம் புதுப்பொலிவு பெறும்.