மீன் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?

மீனில் இருந்து பெறக்கூடிய ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அனும் பாலி அன் சாட்டுரேட்டட் ஃபேட்டி ஆசிட் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும்.

இதை நம் உடல் தானாகவே உற்பத்தி செய்யாது. அதனால் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமாக மட்டுமே பெற முடியும்.

ஒமேகா 3 ஃபேட்டி எதில் உள்ளது?

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இரண்டு வகைப்படும். அதில் முதல் ஆசிட் மரைன் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகும். இதில் docosahexaenoic மற்றும் Eicosapentaenoic ஆகிய அமிலங்கள் கலந்திருக்கும். இது மீன்களில் மட்டுமே கிடைக்கும்.

இடண்டாவது ஆசிட்டாக அல்ஃபா லினோலெனிக் அமிலம் ஆகும். இது நட்ஸ், விலங்குகளின் கொழுப்பு, ஆளி விதை, வெஜிடபிள் ஆயில் போன்றவற்றில் நிறைந்திருக்கும்.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டின் நன்மைகள்?

பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் கொலஸ்டாரால் ரத்தம் மற்றும் உடலில் அதிகமாக சேராமல் தடுத்து, உடல் எடையை குறைக்கிறது.

தினமும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஒமேகா 3, ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

டயட்டில் அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒமேகா 3 உள்ள உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், இன்சுலின் அளவை சீராக்கி, சர்க்கரை நோயின் தீவிரத்தை குறைக்கும்.

ஒமேகா 3 எடுத்துக் கொள்வதால், அது எலும்பு மற்றும் மூட்டுக்களை வலிமையாக்கி, ஆர்த்ரைட்டீஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.

அல்சைமர், ஆஸ்துமா, மன அழுத்தம், ப்ரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் ஆகிய நோய்களை குணமாக்க தினமும் ஒமேகா 3 நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒமேகா 3 உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், சருமத்தில் தோன்றும் கரும்புள்ளி, வறட்சி, பருக்கள் ஆகியவை வராமல் தடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்