மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் தொலைக்காட்சி, ஓவியா இல்லாமல் இனிமேல் ஒருநாள் கூட நிகழ்ச்சியை நடத்த முடியாது என்பதை புரிந்து கொண்டார்களோ என்னமோ, ஓவியாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

 

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு வாக்களிக்க நேற்று ரைசாவை தவிர அனைவரும் அறிவிக்கப்பட்டனர்.

 

ஆனால் யாருக்குமே ஓட்டு போடும் எண்ணமே இல்லை. இதே ஓவியா இருந்திருந்தால் ஓட்டுக்கள் லட்சக்கணக்கில் குவியும்.

 

ஒரு அரசியல்வாதியே ஓவியாவுக்கு விழுந்த ஓட்டு எனக்கு விழுந்திருந்தால் நான் முதல்வர் ஆகியிருப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஓவியா இல்லாத பிக்பாஸ் நிலையை புரிந்து கொண்ட தொலைக்காட்ச் நிர்வாகம் வைல்ட் கார்ட் என்ற முறையில் மீண்டும் ஓவியாவை பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 43 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் மீதி நாட்களில் நிகழ்ச்சி தொடர வேண்டும் என்றால், அதற்கு ஓவியாவின் வருகை ஒன்று மட்டுமே வழியாக இருக்கும்.

 

அதேபோல் பரணியும் மீண்டும் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் ஓவியாவும் பரணியும் உள்ளே நுழைந்தால் எம்ஜிஆரின் ‘எங்க வீட்டு பிள்ளை’ இரண்டாம் பாதி போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அப்படியே ஓவியா மீண்டும் வந்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி, உள்ளே இருப்பவர்களுக்கு அதிர்ச்சி! என்கின்றனர் விமர்சகர்கள்.