மின் வெட்டு இல்லை! பயப்பட வேண்டாம்

இலங்கையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்து வரும் மழை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியினை வழங்கியுள்ளது.

அதாவது, இன்று நள்ளிரவு முதல் மார்ச் 31ம் திகதி வரை மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக வௌியான செய்திகள் தவறானது என, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

முன்னர் அவ்வாறானதொரு திட்டம் இருந்த போதும், தற்போது மின் உற்பத்தி நிலையப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், மின் விநியோகத்தை தடையின்றி வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.