மின்சார பயன்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் வேண்டுகோள்!

நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி 35 சதவீதத்தினால்குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதிஅமைச்சர்

அஜித் பெரேரா, மின்சாரப் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாகபயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடுமையான வரட்சி நிலவுகின்ற போதும் மின்சார துண்டிப்பு இடம்பெறாது என்றும் அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.

அனல் மின் நிலையம் மூலமான மின் உற்பத்தியை கொண்டு வரட்சியினால் ஏற்படக்கூடியமின்சார பிரச்சினையை எதிர்கொள்வதற்கு தாம் தயாராகி வருவதாக அமைச்சர்சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மின் வலைப்பின்னலுக்கு மின்சாரத்தை வழங்க முன்வருவார்களாயின்அவ்வாறானோர்களுக்கு ஒரு மின் அலகிற்கு 36 ரூபா 50 சதம் வழங்கப்படும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

மின்துண்டிப்பு இடம்பெறுமாயின் அது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படும். ஆனால்தற்பொழுது அவ்வாறான ஒரு தேவை இல்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.