மாவிலையின் அருமை கூறும் அறிவியல்!

பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மாவிலைகள் சிறந்த கிருமி நாசினி என்பது பலருக்குத் தெரியாத உண்மையாகவே இருந்து வருகின்றது.
மாவிலையை நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்தமைக்கான, விஞ்ஞானக் காரணங்கள் வருமாறு.

வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.

விழாக்களின் போதும், சுப நிகழ்ச்சிகளின் போதும், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மக்கள் கூட்டத்தினால் வெளியிடும் கரியமில வாயுவை(carbon dioxide) தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. இதனால்தான்,விழாக்களின் போதும், சுப நிகழ்ச்சிகளின் போதும், மாவிலை கட்டப்படுகிறது. காய்ந்து உலர்ந்து விட்ட மாவிலைகளிலும் அதன் சக்தி குறையாது.

மக்கள் அதிகமாகக் காணப்படும் இடங்களில், அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது. காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பக்டீரியாக்களும்(bacteria) மக்களைத் தாக்குகின்றன. நோய்க்கிருமிகளிலிருந்தும் பக்டிரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.

புரோஹிஸ்பிடின்(purohispidin) என்னும் வாயுவை, மாவிலைகள் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பக்டீரியாக்களையும், புரோஹிஸ்பிடின் வாயு அழிக்கிறது.
விசேஷ நாட்களில் பலர் கூடும். போது உடம்பில் இருந்து வியர்வை நாற்றமும் ஆவியும் வெளிப்படும். கட்டி இருக்கும் மாவிலை தோரணங்கள் காற்றில் பரவி இருக்கின்ற கிருமிகளை அழித்துவிடும்.

அர்த்தம் பொதிந்த நம் பாரம்பரியப் உண்மைகளை தற்போது தவிர்த்து, பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்களை தற்போது நம்மவர்கள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
ஆன்மீக ரீதியாகவும் மாவிலைக்கு சிறப்பிடம் உண்டு. ஒரு கலசத்தில் மாவிலை வைத்து அதன் மேல் தேங்காய் வைத்தாலே அதனைப் பூரண கும்பம் என்கிறோம். மாவிலை கலசத்தில் ஆவாஹனம் செய்யப்படும் தெய்வத்தின் முடியாகவே, மாவிலை உருவகிக்கப்படுகிறது. மந்திர ஒலிகளை ஈர்க்கும் சக்தியும் அதற்கு உண்டு. இதன் காரணமாகவே, கோவில்களில் கலச நீரைத் தெளிப்பதற்கு மாவிலையை உபயோகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.