மாமனாரின் பரிசால் ஆடிப்போன விராட்கோலி!

இந்திய அணியின் தலைவரான விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டாலும், இவர்கள் தொடர்பான செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அனுஷ்கா சர்மாவின் தந்தையும், கோலியின் மாமனாருமான அஜய்குமார் கோலிக்கு பரிசு ஒன்றை வாங்கியுள்ளார்.

fghhகோலிக்கு கவிதை என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் தேஜஸ்வினி திவ்யா நாயக் என்பவர் எழுதிய “ஸ்மோக் அண்ட் விஸ்கி” என்ற புத்தகத்தை கிப்ட்டாக கொடுத்துள்ளார்.

ghjhgஅதில் காதல் மற்றும் உறவு குறித்து 42 கவிதைகள் இடம் பெற்றுள்ளதாகவும், புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்ற போது, அஜய்குமார் மற்றும் அவரது மனைவி ஆஷிமா ஆகியோர் எழுத்தாளர் கையெழுத்துடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

கோலி- அனுஷ்கா சர்மா தங்கள் திருமணத்தின் போது வந்திருந்த உறவினர்களுக்கு கவிஞர் ரூமியின் சூபி என்ற கவிதை புத்தகத்தை பரிசளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.