மாணவர்களே!.. உங்களுக்கான புதிய பொது அறிவுகள் இதோ….

பூமியானது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனைச்சுற்றி வருகின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள்.

பூமியில் இருக்கும் நாம் முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவதானித்துக்கொள்ள வேண்டும் என்பதை பூமி சொல்லித்தரும் பாடமாக அறிந்து கொள்வோம். அத்தோடு இதையும் அறிந்து கொள்ளுங்கள்.

 

 1. பூமியின் நீர்ப்பரப்பு: 139,440,000 சதுர கி.மீ
 2. பூமியின் நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ
 3. பூமியின் விட்டம்: 7920 கி.மீ
 4. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம்: 240,000 கி.மீ
 5. பூமியிலிருந்து வாயு பரந்திருக்கும் தூரம் :1000 கி.மீ
 6. பூமி சுழலும் வேகம்: 66,600 கிமீ/மணிக்கு
 7. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது : அமாவாசை
 8. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது: பெளர்ணமி
 9. பூமி சுழலும் பக்கம்: மேற்கிலிருந்து கிழக்காக
 10. பூமிக்கு சூரிய ஒளி வர எடுக்கும் நேரம்: 480 செக்கன் (8 நிமிடம்)
 11. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் பூமியின் மீது விழும் போது “சூரிய கிரகணம்” ஏற்படும் அதாவது அமாவாசையில் வரும்
 12. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் போது “சந்திரகிரகணம்” ஏற்படும்; அதாவது பெளர்ணமியில் வரும்
 13. நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
 14. சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
 15. பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
 16. நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
 17. கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
 18. மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
 19. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
 20. மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
 21. பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
 22. உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
 23. ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.
 24. பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
 25. பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
 26. நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
 27. நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
 28. யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
 29. ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.