மாணவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!

கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. இந்நிலையில்,  மாணவர்களுக்கான காப்புறுதி முறைமையும் அமுலாகின்றது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொட விஹாரமகாதேவி கல்லூரியில் இன்று தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றதாகவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.