மஹிந்த தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல்..!!!

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு விஜேராமயவில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

தனது பதவிக்காலம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானம் பேசிய விவகாரம் பல விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது.
மேலும் தேர்தல் நேரத்தில் இலங்கை மத்திய வங்கியின் மோசடி தொடர்பான அறிக்கை வெளிவந்திருப்பதும் அரசியல் களத்தில் சூடுபிடித்திருக்கும் விடயமாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த விவகாரங்கள் தொடர்பாகவும், தேசியப் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் கொழும்பில் இன்று ஒன்றுகூடுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய சந்திப்பின்போது எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரசார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் நம்பப்படுகின்றது