மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் தே.மு.தி.க. தலைவா்!

தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் கடந்த மாதம் இறுதியில் மருத்துவ பாரிசோதனைக்காக சிங்கப்பூா் சென்றார். இது தொடா்பாக அக்கட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை சிங்கப்பூா் செல்வது வழக்கம். அதன்படி தான் தற்போது சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பத்திரிகையாளா்களை தாக்கிய வழக்கில் விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பின்னா் ரத்து செய்யப்பட்ட நிலையில், புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.