மரண அறிவித்தல் – திருமதி முருகேசு செல்லம்மா

மரண அறிவித்தல்

 

 

 

 

பிறப்பு 04.11.1931

 

இறப்பு 29.09.2017

திருமதி முருகேசு செல்லம்மா

 

புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மற்றும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி முருகேசு செல்லம்மா அவர்கள் 29.09.2017 வெள்ளிக்கிழமையன்று இறைபதம் அடைந்தார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற முன்னாள் பிரபல வர்த்தகர் பொன்னையா முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

 

காலஞ்சென்ற ஆறுமுகம் ,சோமசுந்தரம், சுந்தரம், சிவகொழுந்து ஆகியோரின் மைத்துனியும், அன்னலட்சுமி, தங்கம்மா, சிவகாமிசுந்தரி ஆகியோரின் சகலியும், காலஞ்சென்ற காலாவதி ,கங்காதரன், லீலாவதி ,ஸ்ரீகாந்தன் ,இந்திராவதி, மகேஸ்வரன், விமலாவதி, சிவலிங்கம், லைலாவதி ஆகியோரின் அன்புத்தாயாரும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சற்குணதேவி கிருஷ்ணப்பிள்ளை, வத்சல்யா ,சிவக்குமார், மணிமேகலாதேவி, வன்மீகலிங்கம், சிவாஜினி, தவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 

காலஞ்சென்றவர்களான பொன்னாச்சி, சின்னத்தங்கம், இளையத்தம்பி ,சின்னய்யா, சிவக்கொழுந்து, தில்லையம்பலம் மற்றும் நடராசா ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற இராமலிங்கம், பர்வதம், அன்னலட்சுமி, இராமசாமி, மங்கையற்கரசி, பரமேஸ்வரி, ஆகியோரின் மைத்துனியும், மோகன்ராஸ் – ரஜினி ,கார்த்திகா –  சென்தீபன், காயத்திரி, மதுசுதன், ஜெயந்தனி, பிரகாஷ், மனோரதன், சசிரேகா – அசோக்குமார், தாட்சாயினி – அண்ணாதாசன் ,சாரங்கனி – ராஜ்குமார், வைதேகி, சிந்தியா, கோபி, நிரோசன், லக்ஷனா, பிரவின், பிரியங்கன், பிரியந்தி, கோகுலன், றம்மியா, கீர்த்திகா, ஆகியோரின் அன்பு பேத்தியும் மகிற், ரிஷிக், அபிநயா, அக்ஷயா ,கிர்த்திக், கிரிஷ், மகிஷ் ,ரித்விகா ,ஆதித் ஆகியோரின் பூட்டியுமாவாள்.

 

அன்னாரின் பூதவுடல் கொழும்பு ஜயரட்ண மலர்ச்சாலையில் 2017.10.02 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 03.10.2017 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணிக்கு கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் 12.00 மணிக்கு பூதவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் .

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

 

தகவல்- பிள்ளைகள், மருமகள்கள்

தொலைபேசி எண் : 011-2599364

இல:  12/ 3 /5/ ரோகினி றோட், வெள்ளவத்தை, கொழும்பு -6