மம்தா கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு!

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேற்கு மிதினிபுர் மாவட்டத்தின் கராக்பூர் பகுதியில் உள்ள உள்ள திரிணாமூல் கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சில திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கச்சா குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலின் போது கட்சி அலுவலகத்தில் இருந்த திரிணாமூல் கட்சி ஆதரவாளர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீதமுள்ள 3 பேர் உயர் சிகிச்சைக்காக மிதினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காரக்பூர் டவுன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து திரிணாமூல் தலைவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.