மன்னியுங்கள் நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்!

ஏழைகளாகிய நீங்கள் பாக்கியவான்கள்.. தேவனின் ராஜ்ஜியம் உங்களுக்குறியது.. இப்பொழுது பசியாக இருக்கும் நீங்கள் பாக்கிவான்கள்.. திருப்தி அடைவீர்கள்.. இப்பொழுது அழுகின்ற நீங்கள் பாக்கயிவான்கள் நகைப்பீர்கள்.. உங்களை யாரும் பொல்லாதவன் என நிந்திக்கும் போது நீங்கள் பாக்கியவான்கள்.. அந்நாளில் மனம் மகிழ்ந்து துள்ளி குதியுங்கள்..

நகைக்கின்ற நீங்கள் துன்பப்படுவீர்கள். எல்லோரும் உங்களை புகழ்ந்து பேசும் பொழுது உங்களுக்கு ஐயோ..

சத்துருக்களை சிநேகியுங்கள்.. பகைக்கிறவர்களுக்க நன்மை செய்யுங்கள்.. சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள்.. நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.. உன்னை ஒரு கண்ணத்தில் அறைகிறவனுக்கு மறுக்கண்ணத்தினையும் காண்பி.. உன் அங்கியினை எடுத்துக்கொள்கிறவனுக்கு உன் அஸ்திரித்தினையும் கொடு.. உன்னிடத்தில் கேக்கிற எவனிடத்திலும் கொடு..

உன்னுடையவற்றை எடுத்துக்கொள்கிறவனுக்கு அதனை திரும்ப கேளாதே….. நீங்கள் பிறரிடம் எதிர்பார்ப்பவற்றை மற்றவர்களக்கும் செய்யுங்கள்..

விரோதிகளை நேசியுங்கள்.. கைமாறு கருதாமல் கடன் கொடுங்கள்.. அவர் நன்றி மறந்தவருக்கும் பொல்லாதவருக்கு நல்லவராக இருக்கிறார்.
குற்றம் தீர்க்காதீர்கள்.. நீங்களும் தீர்க்கப்படமாட்டிர்கள்..

தண்டனைக்குள்ளாக்காதீர்கள் நீங்கள் தண்டிக்கப்படமாட்டிர்கள்..
மன்னியுங்கள் நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்…
கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்….

நீங்கள் அளக்கும் அளவை ப்படி உங்களுக்கு அளக்கப்படும்…
உன் கண்ணில் உள்ள உத்திரத்தை உணராமல் உன் சகோதரரின் கண்ணில் உள்ள துரும்பை பார்க்கிறது என்ன?